Saturday, May 9, 2020

அன்னையர் தினம் - அசத்தல் கிரீட்டிங் கார்ட் Mother's Day DIY Pop-up Greeting Card
இந்த அன்னையர்  தினத்திற்கு உங்களை புகைப்படம், வாழ்த்துடன் கடைகளில் கிடைப்பதைப் போன்ற கிரீட்டிங் கார்டினை நீங்களே  தயார் செய்யுங்கள். 

Download Greeting Card Template :

Tuesday, April 7, 2020

தி ஷசாங்க் ரெடம்ப்ஷன்கொரோனா எனும் கிருமியால் நவீன உலகம் அனுபவித்திராத சூழ்நிலை. யாவரும் வீட்டிற்குள். வேலைகள், தொழில்கள் முடக்கம். வரும் மாதங்கள், பொருளாதரம் குறித்த கவலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாத நம்பிக்கை ஒளி. இந்நிலையில் நம்மை நாமே ரீசார்ஜ் செய்துக் கொள்ள, எதிர்காலம் குறித்த நம் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.  ஒரு திரைப்படம்!


தி ஷசாங்க் ரெடம்ப்ஷன் (The Shawshank Redemption)


உலக திரைப்படங்கள் குறித்த தகவல்களை தரும் IMDB.com இல்  உலக அளவில் ரசிகர்களது வாக்குகளின்படி டாப் ரேட்டட் திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்து நிற்கிறது ஷசாங்க் ரெடம்ப்ஷன். வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களை ஆட்கொள்ள அப்படி என்னதான் இருக்கிறது இத்திரைப்படத்தில்...?


நாம் எவ்வாறான சூழ்நிலையில் சிக்கி சிறைபட்டு இருந்தாலும், ஒரு நாள் எல்லாம் நாம் விரும்பியபடி மாறும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தால், முயற்சி செய்து கொண்டேயிருந்தால், நம் நிலை நாம் விரும்பியது போல் ஒரு நாள் நிச்சயம் மாறும். மாற்ற முடியும். நாம் கொண்ட  நம்பிக்கை வீண் போகாது என்பதே இத்திரைப்படத்தின் சாராம்சம்.


கதைக் களம் : 


தனது மனைவி மற்றும் அவரது காதலனை கொன்றதாக இரட்டை ஆயுள் தண்டனையுடன் ஷசாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார் வங்கி உயர் அதிகாரி ஆன்டி டுப்ரென்ஸ்.  வார்டன் நார்ட்டன் மற்றும்  கேப்டன் ஹேட்லியின் இரும்புப் பிடியில் கைதிகள் அவதியுறும் சிறைச்சாலை அது. 


இங்கு ஏற்கனவே கைதியாக இருப்பவர் ரெட். வெளியிலிருந்து சிகரெட், மதுபானம் மற்றும் சிற்சிறிய பொருட்களை வரவழைத்து உள்ளிருக்கும் கைதிகளுக்கு தருவிப்பதில் வல்லவர்.  ஆன்டியும் ரெட்டும் விரைவில் நண்பர்களாகிவிடுகின்றனர். தொடக்கத்தில் சிறையில் இருக்கும் மற்றொரு கும்பல் மூலம் ஆன்டிக்கு சுயபாலின துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.


ஒருமுறை கேப்டன் ஹேட்லிக்கு ஏற்படும் நிதி கையாளுதல் பிரச்சனையை தக்க யோசனை தந்து உதவி புரிகிறார் ஆன்டி. இதன்மூலம் வார்டனின் பார்வை ஆன்டியின் மீது திரும்புகிறது.

சிறைச்சாலை, கைதிகளின் உழைப்பை பயன்படுத்தியும் ஆன்டியின் நிதி நிர்வாகத் திறனின் உதவியினாலும் வார்டன் ஊழல்கள் புரிந்து பெரும் பணம் ஈட்ட துவங்குகிறார். இதற்கு மாற்றாக ஆன்டி சிறைக்குள் இருக்கும் நூலகத்தை விரிவாக்கவும், கைதிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கவும்  வார்டன் தடையாக நிற்பதில்லை.

19 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் சிறைக்கு வரும் மற்றொரு  கைதி மூலமாக ஆன்டி குற்றமற்றவர் எனத் தெரிய வருகிறது.  இதன் மூலம் தன்னை விடுவிக்க வேண்டும் என ஆன்டி வார்டனின் கேட்கும் நிலையில் தனது ஊழல் குற்றங்கள் வெளியே கசிந்துவிடும் என்பதால் வார்டன் கடுமையாக மறுக்கிறார்.

ஏமாற்றமும் விரக்தியுமாய் காணப்படும் ஆன்டி ரெட்டிடம் வினோதமாக பேசுகிறார். நம்பிக்கையின் சக்தி குறித்தும் விடுதலைக்கு தான் தகுதியானவன் எனவும் கூறுகிறார். என்றாவது ரெட் விடுதலையானால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்.

ஆன்டியின் இத்தகைய பேச்சுக்களினால் கவலையுறும்  ரெட் மற்றும் நண்பர்கள் குழாம் அவர் தற்கொலை செய்து கொள்வாரோ எனப் பயப்படுகிறது. அன்றைய நீண்ட இரவை கடினமாக கழிக்கிறார் ரெட்.

மறுநாள் காலை ஆன்டியின் செயல் அந்த சிறைச்சாலையையே திகைப்புக்குள்ளாக்குகிறது. அங்கிருந்து நாம் எதிர்பாராத திசையில் பயணிக்கும் திரைப்படத்தை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

ஆன்டியின் முடிவு என்ன, அத்தனை வருடங்களும் தனது புத்திக் கூர்மையால் சிறைக்குள்ளேயே அவர் செய்தது என்ன, வார்டனின் முடிவென்ன, ரெட் இறுதியாக ஆன்டி சொன்ன நம்பிக்கையின் வீர்யத்தை உணர்ந்தாரா என்பது ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் மீதிக்கதை.

இந்தத் திரைப்படத்தை பார்த்து முடிக்கையில் ஏற்படுத்தும் பாசிட்டிவ்வான பாதிப்பு அளவிட முடியாதது. மேலோட்டமாக மட்டுமே இப்பதிவில் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கடைசி அரை மணி நேரம் நமக்கு தரும் உத்வேகம், எதிர்பாராத கிளைமேக்ஸ், ஆழமான வசனங்கள், கைதேர்ந்த கலைஞர்களின் நடிப்பு என நம் மனதை சலவை செய்து புத்துணர்வாக்கி விடும் வல்லமை கொண்டது ஷசாங்க் ரெடம்ப்ஷன்.


இன்றும் இத்திரைப்படம் நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு காரணம், இது சொல்லும் சேதி.. அது..

"நம்பிக்கை அளவில்லாத சக்தி கொண்டது.... என்றும் வீண் போகாது."


சில சிறைச்சாலை வன்முறைக் காட்சிகள்,  டைட்டிலில்  சில நொடிகள் வரும்  காட்சிகள் மட்டும்  சிறியவர்களுக்கு ஏதுவானது அல்ல.


- சுகுமார் சுவாமிநாதன், வலைமனைTags : The Shawshank Redemption in Tamil, ஷஷாங்க் ரெடம்ப்ஷன், ஷசாங் ரிடெம்ப்ஷன், ஷசாங் ரெடம்ஷன்

Saturday, March 28, 2020

உங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்


வீட்டில் இருக்க வேண்டிய இந்த சூழ்நிலையில் நேரத்தை உபயோகமாக செலவிட உள்ள வழிமுறைகளை தேடி வரும் பெற்றோர்களுக்கு வரப்பிரசதமாக அமைந்துள்ளது கூகுள் 3டி அனிமல்ஸ் தொழில்நுட்பம்.


இதில் குறிப்பிட்ட சில மிருகங்களை உங்கள் மொபைல் மூலம் உங்கள் வீட்டிலேயே காணலாம், அதன் அசைவுகளை, ஒலிகளை உணரலாம், செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள மிருகங்களில் ஏதோ ஒரு மிருகத்தின் பெயரை கூகுளில் தேடுங்கள். உதாரணத்திற்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல 'Panda' என கூகுளில் தேடவும்.

வரும் முடிவுகளில் 'Meet a life-sized giant panda up close' என்கிற வாசகம் வரும். அதன் அருகில் 'View in 3D' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்வரும் அடுத்த ஸ்கிரீனில் பாண்டா மிருகம் 3டியில் தெரியும். மீண்டும் அதனருகே வரும்
'View in your space' எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமரா இயங்கத் துவங்கும்.

அப்போது வரும் குறிப்பைப் போல, உங்கள் கேமராவை தரையை நோக்கி பிடித்து லேசாக அங்கும் இங்கும் அசையுங்கள். சிறிது நொடிகளில் இப்போது உங்கள் வீட்டிற்குள்ளேயே முப்பரிமாணத்தில் பாண்டா அமர்ந்து மூங்கில் கடித்து சாப்பிட்டு ஒலியெழுப்ப ஆரம்பிக்கும்.

தற்போதைக்கு சிங்கம், சிறுத்தை, ஷார்க், வாத்து, ஆடு, பூனை, கழுகு, பென்குயின், பாம்பு, புலி போன்ற மிருகங்களை இந்த தொழில்நுட்பத்தில் காணலாம்.
Google 3D Animals - Augmented Reality - Article by Valaimanai.in

சீனா விலகும் திரை | புத்தகம்


பூமியின் குரலை ஒடுக்கியிருக்கும் கொரோனா வைரஸின் சொந்த ஊர் என்கிற வகையில், ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் சீனாவின் அறியப்படாத செய்திகளை, வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் சிறந்த புத்தகம், 'சீனா விலகும் திரை' ; ஆசிரியர்:  பல்லவி அய்யர்; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

இடப்புறம் இருந்துகொண்டு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானை நமக்கு நன்கு தெரியும். எப்பொழுதும் அதையே பார்த்திருப்போம். ஆனால் கழுத்தை நேர் எதிரே திருப்பி இந்தப் பக்கம் இருக்கும் சீனாவை நாம் அந்த அளவு கண்டுகொள்வதே இல்லை.

நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் மெழுகில் வார்த்த சீன பொம்மைகளிலிருந்து ஆயிரங்களில் கிடைக்கும் எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் வரை சீன பொருட்கள் இல்லாமல் நாம் இல்லை என்றாகிவிட்ட இன்றைய நிலையில் சீனாவை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.


இந்தியாவில் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது; சீனாவில் இல்லை. இருந்தும் சாலைகள், மின்சாரம், சாக்கடை, தண்ணீர், ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கூடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டது.


சீனாவின் பலம், பலவீனம், மக்கள் மனப்பான்மை, சர்வாதிகார அரசு, தொழில் முறை, பாரம்பரியம், வரலாறு என புத்தக ஜன்னலின் வழியே திரையை விலக்கி பல்லவி ஐயர், சீனாவின் அப்பட்டமான காட்சிகளை காண்பிக்கும்பொழுது, தலை முதற்கொண்டு வால் வரை அமைதியாய் இருக்கும் இந்த டிராகன் மிருகத்தின் சுய உருவத்தை பார்ட் பை பார்ட் அறிய முடிகிறது.


இணையம் என்கிற முரட்டு செய்தித் தொடர்புக் குதிரையை அடக்கிச் சவாரி செய்ய அரசாங்கம் ஏராளமாகச் செலவழித்தது... கூகிளில் போய் ஃபலன் காங் என்று தேடினாலோ, அல்லது சும்மா 'சீனா மனித உரிமைகள்' என்று அடித்தாலோ உடனே உங்கள் இணையத் தொடர்பு அறுந்து விடும்!


சீனாவிற்கு கிளம்புகையில் ஃபிளைட்டில் உட்கார்ந்து இதெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது என ஒரு பாஸ்ட் பார்வர்ட் டிரைலர் காட்டுவதாகட்டும், முடிவுரையில் முதலில் வேலை பார்த்த கல்லூரிக்கு சென்று நினைவுகளை அசை போடுவதாகட்டும் பல்லவி, ஒரு ஃபீல் குட் சினிமாவிற்குண்டான அம்சங்களுடன் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.


சீனாவிலிருந்து வந்திருந்த ஒரு வர்த்தகக் குழுவினரை தாஜ் மகாலைப் பார்க்க அழைத்துப் போயிருந்தேன். டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். வெகு நேரம் வரை அமைதியாக பஸ் ஜன்னலுக்கு வெளியே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், லியோனிங் மாகாணத்திலிருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொழில் முனைவர் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டார். 'மேடம், நாம் நெடுஞ்சாலையில் போகப் போகிறோம் என்று சொன்னீர்களே, அந்த நெடுஞ்சாலை எப்போது வரும்?' நாசமாப் போச்சு, அதே நெடுஞ்சாலையில்தானே இரண்டு மணி நேரமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!


நன்றாக கைவரும் நகைச்சுவை உணர்வை அதிகமாக பயன்படுத்தாமலும், எந்த இடத்திலும் ஜோடனைகள் செய்யாமலும் இயற்கையான நடையில் நூல் செல்வது சுகமான வாசிப்பனுவத்தை தருகிறது.

1990-களின் ஆரம்பத்தில் இந்தியாவின் சாலை வசதிகள் சீனாவைவிட உயர்வாக இருந்தன. மொத்த நீளத்திலாகட்டும், ஜனத்தொகை அடிப்படையில் தலைக்கு எவ்வளவு சாலைகள் இருக்கின்றன என்ற விகிதாசாரமாகட்டும் - இந்தியாதான் முன்னே இருந்தது. பதினைந்து வருடத்தில் நிலைமை தலைகீழ். இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தன்னுடைய குண்டுகுழிகளிலேயே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, சீனா சீறப் புறப்பட்டு மேலே போய்விட்டது.

எந்த கருத்தானாலும் அங்கு ஆசிரியர், சீன-இந்திய ஒப்பீட்டு பார்வையை செய்ய தவறவில்லை. இதன் மூலம் டைட்டிலில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் திரையையும் விலக்கி காண்பிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நாம் தவற விடும் வளர்ச்சியை சீனா எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பது உட்பட நமது ஜனநாயகத்தை அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பது வரை பல்வேறு கட்டங்களில் செய்யப்படும் இந்த ஒப்பீடு உண்மையிலேயே மிகுந்த கருத்தாக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னூற்றி சொச்சம் உள்ள ஒரு குண்டு புத்தகம். ஒரே அமர்வில் நாம் படிக்கக்கூடிய அளவு நேரமிருந்தால் பரவாயில்லை. ஆனால் நாளொரு முறை வாரமொருமுறை படிப்பதாயின் அந்த புத்தகம் அடுத்தடுத்து நாம் கூப்பிடுவது அவசியம். இந்த புத்தகம் அவ்வாறு என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. திருப்புமுனையிலேயே என்னை அசத்திய ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்திலும் அசத்துகிறார்.


'....இந்தியா, டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு பிரச்னை பற்றி நாலு பேர் நாலு அபிப்பிராயத்தைத் தெரிவிப்பது சர்வ சாதாரணம். அதற்காக அவர்களுக்குள் சண்டை என்று அர்த்தமல்ல. வேறு எவ்வளவோ விஷயங்களில் அவர்கள் கருத்து ஒத்துப்போகவும் செய்யலாமே.'

'தெரியும்' என்று தலையை உலுக்கினாள் ஷாவோ.'ஆனால் சீனாவில் வழக்கமே வேறு. இங்கே எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்!


கல்லூரி ஆசிரியராக துவக்க நாட்கள், ஷாவோலின் மடம், தொழில்துறையில் முன்னேறிய பணக்கார கிராமம், வணிக வளாக நகரம், ஆசிரியர் வாழ்ந்த பாரம்பரிய குப்பம் ஹுடாங், திபெத் லாசாவிற்கு விடப்பட்ட முதல் ரயில் பயணம், சந்தித்த பல்வேறு வகையான மக்கள், அவர்களுடனான அனுபவங்கள் என துடிப்புள்ள துணிச்சல் மிக்க நிருபரின் பல்வேறு நிலை வாழ்க்கை குறிப்புகள் வழியே சீனாவை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமான விஷயம், புரிந்து கொள்ள எளிதாகவும் இருக்கிறது.

சீனா குறித்த புரிதல் வேண்டுவோருக்கு ஏராளமான விவரங்கள் சொல்கிறது 'சீனா விலகும் திரை!'

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுத்த மேற்கோள்களாகும்.கட்டுரையாளர் : சுகுமார் சுவாமிநாதன், வலைமனை

உங்களை மேம்படுத்த உதவும் உன்னத புத்தகம்

கடுப்படிக்கும் கணவன், பேசாத மனைவி, திட்டிக்கொண்டே இருக்கும் தந்தை, டென்சன் ஏத்தும் உயர் அதிகாரி, பாலிட்டிக்ஸ் செய்து படுத்தி எடுக்கும் சக ஊழியர்கள்.. கொஞ்சம் யோசித்து பார்த்தால் பிறருடன் நமக்குண்டான உறவு பழுதுகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகலாம். நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை அல்லது பிடிக்குமாறு நாம் நடந்து கொள்ள முடியவில்லை என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் சரி செய்து எல்லோரும் அன்பு செலுத்தி மதிப்பது போல் பெயர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா?


கவலையை விடுங்கள். உங்கள் பிரச்சினை இன்றோடு தீர்ந்துவிட்டது.

ஒரே புத்தகம். உங்களை, உங்கள் வாழ்க்கையை மாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வைத்து உங்களை யாவரும் விரும்பும் வகையில் மாற்றப்போகிறது.


1937ல் வெறும் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்த 'How to win friends and influence people'  என்கிற புத்தகம்தான் அது. அன்று முதல் இன்றுவரையில் சர்வதேச பெஸ்ட் செல்லர் வரிசையில் கம்பீரமாக இடம் பிடித்துள்ள இப்புத்தகம் உலகெங்கிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றி தங்களை மதிப்புமிக்கவராக மற்றவர்கள் கருதுகிறார்கள் என கூறி தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெயர் பெற்றது. அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் இருக்கிறது?


மனிதர்களிடம் பழகும் முறை, அவர்களை புரிந்துகொள்வது, ஒவ்வொருவரையும் அணுகும்முறை, பேசும் விதம், முக்கியமாய் பேசக்கூடாத விதம் என இன்டர்பெர்சனல் ஸ்கிள்ஸ் எனப்படும் மனித உறவுகளை கையாளும் முறைக்கு இன்றைய தேதி வரை உலகில் இதைவிட சிறப்பான புத்தகம் வேறெதுவும் இல்லை. புத்தக ஆசிரியர் டேல் கார்னகி மனவளக்கலை பயிற்சியின் பரமப்பிதா என்று போற்றப்படுபவர். இவரது கருத்துக்கள், பயிற்சி முறைகள் இல்லாமல் இன்று எந்த பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகளும் நடப்பது இல்லை.


ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விதிமுறையாக தரப்பட்டிருக்கும். படித்து தொகுத்துக்கொண்டு நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும். இன்று எதை செய்தோம் எதை தவற விட்டோம் என்கிற பரிசீலனை சில நாட்களுக்கு அவசியம் செய்து பார்க்க வேண்டும். நாளடைவில் அந்த விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தும் விதமும் நமக்கு எளிதாக கைவந்துவிடும்.


2003ல் ஒரு மனவளக்கலை பயிற்சி வகுப்பில் இந்த புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் பயிற்று வித்து விதிமுறைகளை தினமும் ஒரு கார்டில் அச்சடித்து கொடுத்தார்கள். அதை நடைமுறையில் செயல்படுத்தி அடுத்தடுத்த வகுப்பில் அனைவரது அனுபவங்களும் கூறப்படும். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்தது, இதன் பயன் புரிந்து சீரியஸாக செயல்படுத்த ஆரம்பித்தேன். இன்று இப்புத்தகத்தின் பல கருத்துக்கள் மனதில் ஊறி எண்ணங்களாகி சில எனது கேரக்டராகவே மாறிவிட்டது.


அட இந்த விஷயம் இவ்வளவு நாளா தெரியாம போச்சே என வியக்கும் அளவில் இந்த புத்தகத்தின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி பார்க்கையில் நமக்கு ஆச்சரியமிக்க மாற்றங்கள் உறவுகளிடத்தில் மட்டுமல்லாது பழகும் அனைவரிடத்திலும் நிகழ்வதை காண முடியும்.


உங்கள் வேலையில் பணியாளர்கள், அதிகாரிகளிடையே நல்ல பெயர் எடுக்கப்போகிறீர்கள். நண்பர்கள் உறவினர்களிடத்தில் உண்மையான அன்பையும் அன்னியோன்யத்தையும் அதிகரிக்க போகிறீர்கள். சமூகத்தில் உங்களது மதிப்பு உயரப்போகிறது. உங்களை அனைவரும் விரும்ப போகிறார்கள். உங்களை 'நண்பேன்டா' என யாவரும் அன்போடு அழைக்கப்போகிறார்கள். அதற்கு முதல் படியாக நீங்கள் இந்த புத்தகத்தை வாங்க போகிறீர்கள்.


யானி | பா.ராகவன்


அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

Saturday, February 1, 2020

கிரஹாம் பெல் - நூல் அனுபவம்

பல சமயங்களில் தொலைபேசியை வைத்துக்கொண்டு சிலர் பண்ணும் சேட்டைகளை பார்க்கும்போது, போனை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில மாட்டுனா.. என நாம் சொல்வது சகஜமான விஷயம். நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் நிஜமாகவே அந்த நபர் கடந்த வாரம் என் கையில் மாட்டினார். ஒரு புத்தக கடையில்


ஹோய் ஹோய் என்றுதான் தொலைபேசிப் பேச்சைத் தொடங்க வேண்டும் என்றார் பெல். அவர் வாழ்நாள் முழுதும் அப்படித்தான் பேசினார். ஆனால் எடிசன் பயன்படுத்திய ஹெல்லோ என்ற சொல்தான் இன்றுவரை பயன்பட்டு வருகிறது.


கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்கும்பொழுதெல்லாம் எழும் உற்சாக இன்ஸ்ப்பிரேஷன் தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் கதையை படிக்கும் போதும் எழுகிறது. சற்றே அதிகமாய்.


டெலிபோனை கண்டுபிடிச்சவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என கீழ்நிலை வகுப்புகளில் ஒரு ஃபில் இன் தி பிளாங்ஸ் அளவில் மட்டுமே நாம் அறிந்திருக்கும் இவரை பற்றி அறியப்படாத பல ஆச்சரியங்களை இலந்தை சு.இராமசாமி அவர்கள் இந்த புத்தகத்தில் அறியத்தருகிறார். அலெக் ஹெல்ம்ஹோல்ட்ஸ் கருவியை மேலும் ஆராய்ந்தான். ஜெர்மன் புத்தகத்தைப் படித்து மனிதக் குரலை மின்சாரம் மூலம் தொலைவுக்கு அனுப்ப முடியும் என்று ஹெல்ம்ஹோட்ஸ் எழுதியிருப்பதாகத் தவறாகப் புரிந்து கொண்டான்.

தனக்கு மின்சாரத்தைப் பற்றி அதிகம் தெரியாதது ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது என்றும் தெரிந்திருந்தால் தொலைபேசியின் அடிப்படைக் கொள்கையைப் பற்றிச் சிந்தித்திருக்கவே மாட்டேன் என்றும் சொன்னான் அலெக்.


தொடர்ந்து கற்கும் திறனும், விடா முயற்சியும் மற்ற விஞ்ஞானிகளை போலவே பெல்லுக்கும் இருந்தாலும் மற்றவர்களை விட ஒரு வித்யாசமான குணமும் அவரிடம் இருந்தது. கண்டுபிடிப்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சியில இருக்கும்போதும் அதை அப்படியே ஒதுக்கி விட்டு காது கேளாதோருக்கு காணும் முறை பயிற்சி அளிப்பதில் முனைப்பு காட்டி அலெக் என அழைக்கப்பட்ட பெல், அதிசயிக்க வைக்கிறார்.பெல்லுக்கு வியாபாரத்தைப் பற்றிய நுணுக்கங்கள் அதிகம் தெரியாது. என்னை வியாபாரி ஆக்காதீர்கள். தயவு செய்து என்னை என்னுடைய கண்டுபிடிப்புகளோடு உலவ விட்டு விடுங்கள் என்று பெல் சொன்னார்.

பேட்டன்ட் பிரச்சினை, வழக்குகள், வழக்கறிஞர்கள், போட்டியாளர்கள் என கிரஹாம் பெல் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு தந்திருப்பார் என்றே தோன்றுகிறது.ரயில்வே ஸ்டேஷனுக்குக் காதலியை வழியனுப்ப வந்தார் பெல். அங்கு வந்ததும் தன் கையிலிருந்த டிக்கெட்டையும் தான் பெல்லுக்கே தெரியாமல் எடுத்து வந்திருந்த தொலைபேசிக் கருவியையும் அவர் கையில் கொடுத்து பெல்லை ஃபிலடேல்ஃபியா செல்லுமாறு கேட்டுக்கொண்டார் மேபெல்.


பெல் ஏற மறுத்தார்.

மேபெல் கண்களில் கண்ணீர்.

அதுவரை மேபெல்லின் கண்களில் கண்ணீரைப் பார்த்தறியாத பெல், வேறு வழியின்றி ஓடுகிற ரயிலில் ஏறினார்.பெல், மேபெல்லின் மேல் காதல் கொள்வது, அந்நியன் ஸ்டைல் விக்ரம் போல் காதலியின் அம்மாவிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்புவது, திருமணம், அவரது காதல் மனைவி பெல்லுக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருப்பது என பெல்லின் பெர்சனல் வாழ்க்கையையும் சொல்லி போரடிக்காமல் செல்கிறது புத்தகம்.


28 ஜனவரி 1882ல் சென்னை, பம்பாய், கல்கத்தா, கராச்சி என்ற நான்கு இடங்களிலும் ஒரே நாளில் தொலைபேசித் தொடர்பகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் 24 சந்தாதாரர்களுடன், 22 எர்ரபாலு செட்டித் தெரு என்னும் முகவரியில் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.


உலகப்புகழ்பெற்ற பிராண்டுகளான ஏ.டி.& டி., நேஷனல் ஜியாகிராபிக் போன்றவை கிரஹாம் பெல்லில் இருந்து துவங்குகிறதா..இதுபோன்று ஆங்காங்கே கிடைக்கும் பல நல்ல தகவல்கள் மூலம் உங்கள் ஜெனரல் நாலேட்ஜை கொஞ்சம் வளர்த்துக்கொள்ளலாம்.


மற்ற எந்த நூற்றாண்டுக்கும் இல்லாத பெருமை 19 ம் நூற்றாண்டுக்கு உண்டு. மனிதன் தோன்றிய நாள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இருந்த வாழ்க்கை முறைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவன் வாழ்க்கை முறை அமைந்த விதத்துக்கும் பெருத்த மாறுபாடு இருந்தது.இன்று பல்லாயிரக்கணக்கான செய்திகளை ஒரே நேரத்தில் ஓர் ஆப்டிக்கல் கேபிளில் அனுப்பமுடிகிறது என்றால், அதற்கு அன்று அடித்தளம் போட்ட பெல்லுக்கு நாம் தலைவணங்க வேண்டும். ஆனால் அதனால் எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை.


தொலைத்தொடர்பில் இன்று ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிக்கு பெல் முக்கிய காரணகர்த்தா. ஒரு மனிதனின் வாழ்நாள், அவரை அடுத்து வந்து கொண்டிருக்கும் சந்ததிகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது பாருங்கள். 
ஒரு மனிதனின் உழைப்பு நம் அனைவரின் அலைச்சலையும் காலம், பொருள் விரயங்களையும் மாபெரும் அளவில் குறைத்திருக்கிறது. 
ஒரு மனிதனின் சேவை மனப்பான்மை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைமுறையையே புரட்டிப்போட்டிருக்கிறது. 


அந்த ஒரு மனிதன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் வாழ்க்கையை முறையை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. சிறப்பாக அறியத் தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


சிரி, மலர்ச்சியோடு இரு. விரைவிலேயே நீ அப்படியே இருப்பதை உணர்வாய் என்று பெல் அடிக்கடி சொல்வதுண்டு


________________________________________________________

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
இலந்தை சு.இராமசாமி
கிழக்கு பதிப்பகம்


நீல வண்ண சொற்றொடர்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்.
________________________________________________________

Friday, January 11, 2019

பேட்ட & விஸ்வாசம்விஸ்வாசம்

எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி நடிப்பில் இறங்கி அடிக்கும் அஜித்தைப் பார்த்து. ரசிகர்களுக்கு முதல் பாதியே நல்ல விருந்து. பில்ட் அப்கள், ஊரே தரும் மரியாதை என வழக்கமான டெம்ப்ளேட்டில் படம் துவங்குகிறதே என நினைத்தாலும், பதினைந்து நிமிடங்களில் பிளாஷ் பேக் அஜித் முகம் காட்டிய பின் ஆசுவாசப்படுத்துகிறார்.


அலப்பறையான அஜித். வாய்ஸ் மாடுலேஷேன், மேனரிஸம்ஸ் என  சான்ட்விச், பிஸ்ஸா போல வறட்சியாக நடித்துக் கொண்டிருந்தவர், பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு தமிழ்நாடு மீல்ஸ் பார்சல் சொல்கிறார்.


முதல் பாதியில் நயன்தாரா, லொகேஷன்ஸ், காஸ்ட்யூம்ஸ், கலர் டோன்ஸ் என கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஓவர் டூ பாம்பே ஆகி தந்தை மகள் பாசம், குழந்தை வளர்ப்பு என நல்ல பேமிலி டிராமாவாக முடிகிறது.


தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு மாஸ் மசாலாவாக இல்லாமல் நல்ல கருத்தை வலியுறுத்தும் விதத்தில் இதுபோன்ற கதைக்களனில் நடித்த அஜித்தும், இதை வடிவமைத்த சிவாவும் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.


தம்பி ராமையா, ரோபோ சங்கர் போன்றவர்களின் அபத்தமான மேக்கப், விவேக் உள்ளிட்டு அனைவரின் மொக்கை காமெடி, அடிக்கடி வரும் துரத்தல், அடிதடி என  படத்தில் சிலபல குறைகள் உண்டு. ஆனாலும் அவை இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனும் வகையே தவிர, அய்யோ சாமி ஆளை விடுங்கடா எனும் வகையல்ல.


பேமிலி ஆடியன்ஸ் தவிர்த்து பொது ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றமுடியாமால் போகலாம். ஆனால் அஜித்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி துள்ளலாக பார்க்கும் வகையில் தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து இந்த விஸ்வாசம்.பேட்ட! 

 ஃபேன் மேட் டிரைலர், ஃபேன் மேட் போஸ்டர் பார்த்திருப்போம். இது ஃபேன் மேட் ஃபீச்சர் பிலிம். மொத்த படத்தையும் தலைவர் ரசிகராய் இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


டைட்டிலில் துவங்கி எந்தெந்த கோணங்களில், விதங்களில், ஒலியில் ரஜினியை இதற்கு முன்னர் ரசித்தோமோ அதையெல்லாம் எடுத்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் காளியாட்டம் ஆடியிருக்கிறார் கார்த்திக்.


வசனம், காட்சியமைப்புகள், லொக்கேஷன்ஸ், நடிகர்கள் என முதல் பாதி ஹைஸ்பீடில் பறக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என அனிருத்தும் தன் பங்கிற்கு ஆட்டம் ஆடுகிறார். சிம்ரன் எபிஸோட் எல்லாம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் எனும் ரகம்.


முதல் பாதி தந்த பரவசத்தை இரண்டாம் பாதி பதம் பார்க்கிறது. ரொம்ப இழுவையான காட்சியமைப்புகள், அதிகப்படியான ஆக்ஷன் காரம் என கொஞ்சம் பொறுமையை சோதித்து பிறகு முடியும் தருவாயில் சின்ன டிவிஸ்ட் அப்புறம் ஒரு குட்டிக் கதை டிவிஸ்ட் என சின்ன ஆறுதலோடு முடிகிறது படம்.


நவாசுதீன், சிம்ரன், விஜய் சேதுபதி அருமை. பாபி சிம்ஹா, சசிக்குமார் பரவாயில்லை. திரிஷாவெல்லாம் அநியாயம்.


இரண்டாம் பாதியில் பிளாஷ் பேக் தவிர்த்து வெறும் துரத்தல் பழிவாங்கல் என வெகு நேரம் ஆடாமல் அசையாமல் செல்லும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


முதல் பாதி மாஸ். இரண்டாம் பாதி மரணம்!Viswasam, Petta, Review, Valaimanai

Friday, June 3, 2016

இறைவி - புரிந்ததும் புரியாததும்"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...?"

"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற.."

"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. படம் நல்லா இருந்தா தங்கு தங்குன்னு குதிப்பீங்க.. மொக்கையா இருந்தா அமைதியா இருப்பீங்க.. இப்ப வந்து பத்து நிமிஷமா வாயே திறக்கலையே அதான் கேட்டேன்."

"ஹே.. சே... சே.. அப்படி சொல்றியா,,, படம் மொக்கைலாம் இல்ல.. நல்ல கதையுள்ள படமே வர்றது இல்லன்னு சொல்றாங்கல்ல.. அதுக்கு நல்ல துவக்கமா.. பேய், காமெடி டெம்ப்ளேட் படங்களில் இருந்து மாறுதலா ஹெவியா ஒரு நல்ல டிராமா மூவியா இறைவியை எடுத்துக்கலாம்.."

"அப்போ ரொம்ப நல்லா இருக்கா,,"

"அதுக்குன்னு அப்படியும் சொல்லிட முடியாது... அங்கங்க கொஞ்சம் ஸ்லோ, வயலன்ஸ்ன்னு சில மைனஸ்களும் இருக்கு.."

"அப்போ ஆவரேஜா.. ஒருவாட்டி பார்க்கலாம் வகை படமா.."

"நோ.. நோ..  இந்த படத்தை விமர்சனம்லாம் பண்ண மனசு வரலை... இது ஒரு அனுபவம்.. நல்ல பவர்புல் காஸ்டிங், ஸ்டிராங்கான கதை, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பார்க்கிற மனநிலை இருந்தா நல்ல ரசனையான புராடக்ட் இந்த படம். பொதுவா நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாமா மோசம்னும் சொல்ல முடியாத வகை படங்களுக்கு வேணா ஆவரேஜ், ஒன் டைம் வாட்ச்னு அடிச்சிவிடலாம்... ஆனா இந்த படத்தை கூட்டத்தோட கூட்டமா அப்படி சொல்ல முடியாது."

"வேற எப்படி சொல்லலாம்..?"

"அதான் புரியாம பத்து நிமிஷமா யோசிட்டு இருக்கேன்!"

"அடப்பாவமே...  அப்போ கதையையாச்சும் சொல்லுங்க எனக்காச்சும் புரியுதா பார்ப்போம்.."

"அதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரும்மா.."

"யாரு..??"

"கார்த்திக் சுப்புராஜ்"

"அதாரு.,..??"

"படத்தோட டைரக்டர்"

"உங்கக்கிட்ட எப்போ சொன்னாரு... உங்க பேஸ்புக் பிரண்டாக்கும்.."

"இதென்னடா சோதனை..  பொதுவா பிரஸ் நோட்ல சொல்லியிருக்காரும்மா.."

"யாரோ எவரோ பிரஸ்ல சொன்னதுலாம் ஞாபகம் இருக்கு.. படம் முடிஞ்சு நான் என்னென்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்.. அதுல எத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாருங்க.. இத்தனைக்கும் காலையில கழுதை மாதிரி கத்தி கத்தி அனுப்பினேன்... அஞ்சு பொருள் சொன்னா.. அதுல நாலு பொருள் காணும்.. "

"ஐயாம் வெரி சாரிம்மா.. இறைவி பார்த்தா ஒரு வாரமாச்சும் மனசு பாதிக்கும்னு சொன்னாங்க.. அதான் படம் தந்த பாதிப்புல மறந்துட்டேன் போல..."

"யாரு சொன்னாங்க.."

"அவங்களே மேக்கிங்-வெப் சீரிஸ்ல சொல்லிக்கிட்டாங்க..."

"ஏங்க படுத்துறீங்க..  எல்லா படமும் பார்க்க மாட்டேன்.. இது சயின்ஸ் பிக்ஷன் படம் சூர்யா நடிச்சது.. இது ஜிகர்தண்டா எடுத்தவரு படம்.. இது அப்படியாக்கும.. ஆணை பூனைன்னு ஒவ்வொரு படத்துக்கும் என்னத்தையாவது சொல்லிட்டு போக வேண்டியது.. சினிமான்னா எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சொல்ற பொருள் வாங்கிட்டு வர மட்டும் மறந்து போயிடுது இல்ல... சொல்றதை காதுல வாங்குறதில்லை.. என்ன பார்த்தா எப்படித்தான் தெரியுதோ.. ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல.."

"அய்யோ.. இப்ப புரிஞ்சிடுச்சு.... இறைவிலயும் இதைத்தான்..."

"அடிங்ங்ங்ங்ங்....."

Thursday, March 26, 2015

இந்தியா - ஆஸ்திரேலியா | லைவ் பிளாக்கிங்


5:32 pm

சோர்ந்து போகவும் வசை பாடவும் இது 2007க்கு முந்தைய காலகட்டம் அல்ல. கோப்பைகள் எங்களிடம் நிறைந்திருக்கிறது. வெற்றி எங்களுக்கு பழக்கமாகி இருக்கிறது. ஒருவர் அவுட் ஆனதும் மற்றவர்கள் வரிசையாய் பின் செல்லும் தலைமுறையில் பிறந்து அந்த Fear of Failure மனப்பான்மையையே பார்த்து வளர்ந்த எனக்கு கடந்த பத்தாண்டுகளாய் யாரையும் எதிர்கொண்டு கடைசிவரை போராடும் தன்னம்பிக்கையை தோனி & கோ கற்றுத்தந்திருக்கிறார்கள். Respect, Salute, Won hearts, Legend போன்ற அலங்கார வார்த்தைகளால் தோனியின் தலைமைப் பண்பினையும் ஆற்றலையும் வர்ணிக்க வேண்டியதில்லை. சிம்பிளாக Leader என்றே சொல்லலாம். அந்த சொல்லின் அப்பட்டமான அர்த்தமாய் விளங்குபவர் அவர். இல்லை 'தல' என்றும் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் மெர்சலாகவும் இருக்கும்.

நாள் முழுவதும் இணைந்திருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி!


4:52 pm

ஏற்கனவே ICC ன்னா Indian Cricket Council ங்கிறாங்க. அப்புறம் நாங்களே டோர்னமென்ட் நடத்தி எங்களுக்கே கப் தந்துக்கிட்டோம்ங்கிற அவப்பெயர் எதுக்குப்பா... ?  # ஏத்தி விட்டு அழகு பார்க்கிறவன்டா இந்த தமிழ்செல்வம்.
முத்தமிழ் கவிஞன் நான். தமிழ்த்தாயின் புதல்வன் நான்

4:42 pm 

இறைவா.. குவார்ட்டர் பைனல்ஸ் தாண்ட முடியாமல் வாட்டர் குடித்துவிட்டு இப்பொழுது கலாய்க்கும் ஃபாரினர்ஸ்ஸை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் யுவராஜ் சிங் இல்லை, சச்சின் இல்லை என  புலம்பும் இந்தியர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.

4:36 pm

விடு தல. 2011 வோர்ல்ட் கப்பே ஷெல்ப்லதான இருக்கு. அதை எடுத்து பாப்பாக்கிட்ட கொடுத்திட்டா போச்சு .. அவ்வ்வ்..

4:22 pm

அட கோஹ்லி, ஜடேஜா எல்லாரையும் விடுங்கப்பா. ஒரு பெரிய மனுஷன் இன்னைக்கும் பொறுப்பில்லாம உட்கார்ந்து எம்.டி.எஸ் ஹோம்ஸ்பாட் வித்துட்டு இருக்கலாமா.. என்ன மாமா இப்படி பண்றீங்களே மாமா


3:58 pm

ஒருவேளை இப்படி இருக்குமோ. இதுவரை செஞ்சுரி அடிக்காதது ஜடேஜாதான். ஒருவேளை அப்படி இருக்குமோ...?


3:05 pm

தல வந்துட்டாரு. வொன் ஹார்ட்ஸ், டயமன்ட், ஸ்பேட், கிளாவர்லாம் வேணாம் கேமையே வின் பண்ணிடு தல.


3:01 pm

அப்பாடா ரெய்னா அவுட்டு. ஹே சீக்கிரம் அந்த ஏசி விளம்பரத்தை போடுங்கப்பா. டெல்லி கணேஷ் என்னா அழகா ஹிந்தி பேசுராரு. பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு.


2:45 pm

இந்த ஸ்டார்க் பையன் ஏதோ வம்பிழுக்குறான் போல. எங்களுக்கென்ன வந்துச்சு. சப் டைட்டில் போடலைன்னா எங்க ஆளுக்கு புரியாதே.. புரியாதே.. ஜாலி.. ஜாலி..

2:41 pm

ரோஹித்தும் போச்சா. இட்ஸ் ஆல் இன் தி கேம். இன்னைக்கு ரெய்னா கையாலதான் ரத்தம் பார்க்கனும்னு இருக்காங்க போல ஆஸி.

2:27 pm

ரைட்டு விடு. ஒரு யூத்தா இதை நாம புரிஞ்சிக்க முடியும். ஃபிகர் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தா ஒரு உண்மையான லவ்வர் பாய் எப்படிய்யா கிளாஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும்? நீங்க கௌம்புங்க தம்பி. இந்த ஸ்கோர் எல்லாம் ரஹானேவே முடிச்சிடுவாப்ல.


2:25 pm

ஹே.. ஜான்ஸ் என்னய்யா 'மும்பை இந்தியன்ஸ் ரூட்டு தல'யவே முறைக்கிற.. பிளேயிங் லெவன்ல இருக்க மாட்ட தெரியும்ல.

2:20 pm

எங்கூர்ல குடும்பத்தோட பைக்ல போனா டிராபிக் போலீஸ் கூட நிறுத்த மாட்டாங்க. ஆகவே யெல்லோ பாய்ஸ் கோஹ்லி அண்ணன் பேமிலியோட வந்திருக்காரு பார்த்து டீசன்ட்டா நடந்துக்குங்க.

1:55 pm

ஆல் ஆஸ்தி பாய்ஸ்,
ப்ளீஸ் நோட், இதுக்கு பேருதான் மௌனமா விளையாடியே வெறுப்பேத்துறது #Indian version of sledging

1:25 pm

அந்த  குழந்தை முகத்தை பார்த்தா இன்னைக்கு சிங்கிளா 300 அடிக்கிற மூட்ல இருக்கிறாப்ல தெரியுது. எதுக்கும் தவான் நீங்க ஒரு 20 ரன் அடிங்க போதும்.


1:18 pm

நீங்க ஆஸ்திரேலியா பிள்ளையா இருக்கலாம். ஆனா எங்க தவான் ஆஸியோட மாப்பிள்ளைடா. பிள்ளைங்க இருந்தா சோறுதான் போடுவாங்க. ஆனா மாப்பிள்ளை வந்தா பிரியாணியே போடுவாங்க. மைன்ட் இட்.

1:13 pm

ஆக்சுவலா 2003 பைனல்ஸ்ல தோத்ததுக்கு பழிவாங்குற மாதிரி 359 அடிக்க விட்டு ஜெயிக்கிறதுதான் தோனியோட பிளான். ஆனா.. இந்த ஆஸி பசங்க அதை புரிஞ்சுக்காம நடுவுல நாலஞ்சு விக்கெட் விட்டாய்ங்கே. # பன்னி யெல்லா பெல்லோஸ்

1:00 pm

இந்தியாவின் சக்சஸ்புல் கேப்டன்னா சொல்றீங்கன்னு இந்த கங்குலி சிரிப்பை அடக்கிக்கிட்டே கருத்து சொல்றாப்புல. மேட்ச் இன்னும் முடியலை தாதாஜி. வெய்ட் அன்ட் சீ.


12:42 pm

லேடீஸ்னா கொஞ்சம் மேக்கப்லாம் போட்டுட்டு கௌம்பி வர்ற்துக்கு நேரம் ஆகும்தானே.. அதுக்காக அப்செட் ஆகி கேட்ச்சை விட்டியே ப்ரோ.. 


12:36 pm

நீ என்னய்யா 'ஜான்'சன்னு பேர் வச்சிக்கிட்டு முழம் சைஸுக்கு அடிக்கிற. செல்லாது செல்லாது.


12:34 pm

'வாட்'டுக்கும் வச்சாங்கல 'டாட்'டு. தம்பி அடுத்த ஆளை சீக்கிரம் அனுப்பு. ரெண்டு ஓவர்ல மிச்ச பசங்களையும் காலி பண்ணாதான் எங்களுக்கு ஒரு ஜாப் சாட்டிஸ்பேக்ஷன் வரும்.

12:24 pm

மஞ்ச சொக்கா போட்னு வன்ட்டா பெரிய கோல்ட்னு நெனப்பா.. தோ பாரு போல்டு.. கௌம்பு!


12:17 pm

நீங்க 4 அடிங்க இல்ல 6 தான் அடிங்க. ஆனா தோனி இருக்கிறவரை உங்களுக்கு 7.5 தான்டா...


12:00 noon

என்னய்யா கிளார்க்கு நீ? ஒரு டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் கூட எழுதலையாமே? அதான் எங்க இருநூறு தளபதி ரோஹித்துக்கு கோவம் வந்து உன்னை டெர்மினேட் பண்ணிட்டாரு.

11:53 am

அவுட்டுக்கு இந்த அம்பயர் அங்கிள்ஸ் கையை தூக்க மாட்றாங்க. அதான் அவங்க கையில ஏதாச்சும் சுளுக்கா இல்லை நல்லா வொர்க் ஆகுதான்னு அப்பப்போ நம்ம பாய்ஸ் பவுன்சர் போட்டு டெஸ்ட் பண்றாங்க. 


11:52 am

சர் ஜடேஜா சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. அப்படின்னா ஆஸி பாய்ஸ் இன்னைக்கு நீங்க சிரிப்பா சிரிக்க போறீங்கன்னு அர்த்தம். 

11:48 am

இவ்ளோ நேரம் கரன்ட் கம்பத்துல கட்டி வச்சு என் தலைவனை அடிச்சீங்களடா.. இப்போ பாரு அவரு கோவம் வந்து 'உள்ளே போ'ன்னு ஒவ்வொருத்தனையா அனுப்ப ஆரம்பிச்சிட்டாரு.


11:40 am 

இது IndvsAus இல்லைடா.. AusvsAshwin ன்னு எல்லாம் இரண்டு நாளா அலப்பறைய கௌப்பி விட்டவங்களுக்கு ஒரு விக்கெட் ஆச்சும் எடுத்து பெருமை செஞ்சுட்டீங்க அஷ்வின் .. பெருமை செஞ்சுட்டீங்க11:30 am

தோனி இப்போ 'பீசு பீசா கிழிக்கும்போதும் இயேசு போல பொறுமை பாரு' மொமன்ட்ல இருக்காரு.. பேட் பண்ணும் போது பாருங்க.. பைப்பை பிடுங்கி அடிக்கப் போறாரு தல.
#பாட்ஷாடா... #தோனிடா..

10:59 am 

இவங்க வேற கமெண்டரியில தோனி வாயை அசைச்சா கூட ஏதோ வியூகம் பண்றாருங்கிறாங்க. அது வியூகம் இல்லீங்க.. சிவிங்கம்.

10:50 am 

விக்கெட் போகலைன்னு லீவை கேன்சல் பண்ணிட்டு மக்கள் மறுபடி ஆபிஸ் கிளம்புறாங்கன்னு தகவல் வருது. இப்போ ஸ்கோர் விடலைன்னா அப்புறம் ரோஹித் எப்படி 200 அடிக்கிறது, சின்ன தல கோஹ்லி எப்படி 100 அடிக்கிறது.. இவ்ளோ தூரம் பறந்து வந்திருக்கிற சின்ன அண்ணி டிஸ்ஸப்பாய்ன்ட் ஆயிட மாட்டாங்க..? இதுவும் ஒரு கேம் பிளானிங் மக்களே.. 

10:20 am 

பிறந்த குழந்தைக்கு ஃபாரின்ல இருந்து பொம்மை வாங்கிட்டு வர்றவன் தகப்பன். ஆனா வோர்ல்ட் கப்பையே வாங்கிட்டு போறவன்தான் என் தலைவன். ‪#‎தலதோனிடா‬ ‪#‎அண்ணிசாக்ஷிடா‬‪#‎குட்டிபாப்பாடா‬

10:18 am

பீல்டிங் நிக்க வைச்சா 'இன்னும் அவங்க வரலியே'ன்னு தேடிக்கிட்டு இருக்காப்ல கோஹ்லி. அதான் தல அவரை கூப்ட்டு ஒரு ஓவர் கொடுத்து கேமை கான்சென்ட்ரேட் பண்ண வச்சாரு. என்னா ஐடியா தல. சான்ஸே இல்ல தல. மெர்சல் தல.#IndvsAus | Live Blogging | valaimanai