Monday, June 27, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 27 06 11
விகடனில் பெயர் வராதா என்பது கல்லூரி நாட்களின் கனவு. கடந்த வார விகடனில் எனது பெயருடன் பேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. விகடனுக்கும், இணைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வெற்றி எப்.எம்மில் பதிவர் நண்பர் லோஷன் தினமும் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார். காலை பொழுதுகளில் அவர் நடத்தும் விடியல் சிறப்பாக இருக்கிறது. சீரான குரல், சுவையான ஏற்ற இறக்கங்களுடன் அவரது தொகுப்பில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 'நாள் ஒரு தளம்' பகுதியில் வலைமனை குறித்த அறிமுகம் தந்த அவருக்கும் வெற்றி எப்.எம் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றி எப்.எம் கேட்க : http://www.vettri.lk/

கிழக்கு பதிப்பகம் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு போய் இருந்தேன். தவறவே விடக்ககூடாத விற்பனை. சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நான் வெறும் 500 ரூபாய்க்கே வாங்கினேன். இந்த வருடத்திற்கான புத்தகங்கள் ஸ்டாக் வைத்து விட்டேன் வீட்டில்.

இடம் : எல்.ஆர்.சுவாமி ஹால், சிவா விஷ்ணு ஆலயம் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில் , டி.நகர் | காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.

ஆன்லைன் சிறப்பு விற்பனையும் உண்டு.
விவரங்களுக்கு : http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_11.html

முழுமையான திருப்தி தராமல் அவன் இவன் எவனோ மாதிரி இருந்தது. இதற்கு இன்னொருமுறை மாவீரனே பார்த்திருக்கலாம் போல. தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் அரிதாகவே ஜெயிக்கும். மாவீரன் சிறப்பான முயற்சி.

மீபத்தில் பல புத்தகங்கள் படித்தும் அது குறித்து பகிர முடியவில்லை. காரணம் கடந்த பல வாரங்களாக வீட்டில் லோ வால்டேஜ். இதுவே கூட பல புத்தகங்கள் படிக்கும் நிலையை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம். ஏரியாவில் யாராவது ரெண்டு பேர் ஏசி ஆன் செய்துவிட்டால் இங்கே கணிணி இயக்க முடியாது. சீக்கிரமாய் உஷ்ணம் நீங்கி, நான் பதிவெழுத சூரிய பகவான் கருணை காட்ட வேண்டும்.

னது சமீபத்திய சில டிவிட்ஸ்/பஸ் :


வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க அமெரிக்கா காட்டும் ஆர்வம், வளர்ந்து வரும் தங்களது பிரம்மாண்ட படைகளுக்கு உலக மக்கள் தொகை தூசு என்பதாலா?


லேப்டாப் கொடுப்பதற்கு முதற்கட்டமாக பாடபுத்தகங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறோம்.


எதிரி ஜெயித்துவிட்டால் துன்புறட்டும் என எண்ணுபவன் நிலத்தில் கண்ணி வெடி புதைத்து வைப்பான் - கலைஞரோ சிம்பிளாய் பாட புத்தகத்தில் கவிதை எழுதி வைத்துவிட்டார் # ராஜதந்திரம்8 comments:

CS. Mohan Kumar said...

Congrats for Vikatan & Vetri FM.

Prabu Krishna said...

விகடன்ல பாத்தோம் தல. வாழ்த்துகள். அப்புறம் குழந்த, குட்டி எல்லாம் நலமா?

குசும்பன் said...

வாழ்த்துகள் பங்காளி

N.H. Narasimma Prasad said...

வாழ்த்துக்கள் நண்பரே.

முரளிகண்ணன் said...

Best Wishes

butterfly Surya said...

அருமை. வாழ்த்துகள்.

அடடா said...

வாழ்த்துக்கள் நண்பரே.GREAT CREATIVITY

அடடா said...

வாழ்த்துக்கள் நண்பரே.SUPER , GREAT CREATIVITY


ELTECH JAYAVEL