Friday, October 21, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 21 10 11

ள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் எல்லா கட்சிக் கொடிகளையும் பார்த்து கண் பூத்து போய்விட்ட நிலையில் கடந்த வாரம் பளிச்சென ஒரு மினி வெள்ளைக்கொடி பேரணியை நெல்சன் மாணிக்கம் சிக்னலில் பார்த்தேன். 

(என் படங்களின் சோதனையை தாங்க) 'உன்னால் முடியும்'  என தமிழக மக்களுக்கு தலைவன் சொல்லும் வாசகம் பொறிக்கப்பட்டு, என் படங்கள் இங்கிருந்துதான் எடுக்கப்படுகின்றன என ஆந்திரா நோக்கி அவர் கைகாட்டும் சிறப்புமிக்க கொடி அது.

மற்ற கட்சிக்காரர்கள் பளீர் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு உலா வருவதையே பார்த்து பழகிவிட்ட நிலையில் இவர்கள் அழுக்கு ஜீன்ஸ், கட்டம் போட்ட காட்டன் சட்டையுடன் பைக்கில் உலா வந்ததை காண புதியதாக இருந்தது.

அது சரி.. பொட்டு பொடிசு கட்சியெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்ல தனித்தனியா பாலம் கட்டும்போது அணில் மட்டும் ஏன் வெறும் கல் எடுத்து தந்துக்கிட்டு இருக்காரு?
நீல நிறத்தில் சதுர வடிவிலான ஒரு தள்ளுவண்டி. மேல் உள்ள கதவை திறந்து அதில் எலுமிச்சை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அண்ணா யூனிவர்சிட்டியை சுற்றிய இடங்கள், ஏர்போர்ட் அருகில் என சென்னையின் பல சாலைகளின் அங்கம் இந்த இன்ஸ்டன்ட் லெமன் ஜுஸ் கடைகள்.

5 ரூபாய்க்கு சுர்ரென்ற நாக்கில் உரைக்கும் ஜுஸ் தருவார்கள். முன்பெல்லாம் குடித்திருந்தாலும் இப்போதெல்லாம் கலக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த பயம் காரணமாக தவிர்த்து வந்தேன்.

தற்போது அந்த தள்ளுவண்டிகளில் ஆச்சர்யம் கலந்த அப்டேட் ஆக சோடா வைத்து,  கண்முன்னே சீல் பிரித்து லெமன் சோடா தருகிறார்கள். சமீபத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் கண்ணில் பட்ட ஒரு தள்ளு கடையில் குடித்துக்கொண்டே "இது நல்ல ஐடியாவா இருக்கே" என விசாரித்தபோது, "ஒருநாளைக்கு 50, 60 பாட்டில் போகுது சார்.. அந்த பாட்டில்ல இருக்கிற டேட் எடுத்து பாருங்க" என்றார். பார்த்தால் முந்தைய தின தேதி இருந்தது.

"ஸ்டாக் வண்டி வர்ற வழியிலயே மடக்கி எடுத்துட்டு வர்றேன் சார்" என மேலும் ஆச்சர்யமளித்தார்.மெட்ரோ ரயிலோ மோனோ ரயிலோ ஏதோ ஒரு சிக்கு புக்கு சென்னையில் பறக்கப்போகும் நாள் வரை மனுஷன் டிராபிக்ல நொந்து நூடுல்ஸ் ஆயிடுவான் போல.
ஆனா நான் கேக்குறேன்.. இந்த டிராபிக்ல கொஞ்சம் கூட நிக்காம சர்ர்ருன்னு போயிடுற கலைஞர், ஜெயலலிதா இவங்க பெயரை கல்வெட்டுல போடும்போது, சிட்டி முன்னேற்றத்துக்காக டிராபிக் ஜாம் அவஸ்தையை பொறுத்துக்குற மக்கள் பெயரை எல்லாம் ஏன் போடக்கூடாது?


ரூம்ல நெறையா கொசு இருந்தா ஆக்டிவ் மோட் என்கிற விளம்பரத்தை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த மெஷினை வட்டமடித்தபடியே கொசு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறது.  எனக்கு தெரிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாம் புகுந்து கடிக்குதுப்பா...!!

9 comments:

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி ஹி....
கொசு கடிக்கு கரடி ரத்தம் பூசவும்...

Prabu Krishna said...

ஹா ஹா ஹா கொசு மேட்டர் சூப்பர். உங்களுக்கு பரவால்ல சாக்ஸ் உள்ள மட்டும்தான் கடிக்குது.

N.H. Narasimma Prasad said...

கொசுக்கடி, செம ஜோக் 'கடி'.

SURYAJEEVA said...

அனைத்தும் அருமை... அரசியல் என்ற வார்த்தை அர்த்தத்தை இழந்துள்ளது... கொசு பரிணாம வளர்ச்சியின் நேரடி உதாரணம்... சென்னை மக்களின் பெயரை போட்டு கல்வெட்டை வைக்க எவ்வளவு பெரிய கல் தேவை படும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

வவ்வால் said...

சுகுமார்,

அது யார் அணில் ஆடு இலை ஈ என அகர முதலி?

//நீல நிறத்தில் சதுர வடிவிலான ஒரு தள்ளுவண்டி. மேல் உள்ள கதவை திறந்து அதில் எலுமிச்சை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அண்ணா யூனிவர்சிட்டியை சுற்றிய இடங்கள், ஏர்போர்ட் அருகில் என சென்னையின் பல சாலைகளின் அங்கம் இந்த இன்ஸ்டன்ட் லெமன் ஜுஸ் கடைகள்.

5 ரூபாய்க்கு சுர்ரென்ற நாக்கில் உரைக்கும் ஜுஸ் தருவார்கள். முன்பெல்லாம் குடித்திருந்தாலும் இப்போதெல்லாம் கலக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த பயம் காரணமாக தவிர்த்து வந்தேன்.

தற்போது அந்த தள்ளுவண்டிகளில் ஆச்சர்யம் கலந்த அப்டேட் ஆக சோடா வைத்து, கண்முன்னே சீல் பிரித்து லெமன் சோடா தருகிறார்கள். சமீபத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் கண்ணில் பட்ட ஒரு தள்ளு கடையில் குடித்துக்கொண்டே "இது நல்ல ஐடியாவா இருக்கே" என விசாரித்தபோது, "ஒருநாளைக்கு 50, 60 பாட்டில் போகுது சார்.. அந்த பாட்டில்ல இருக்கிற டேட் எடுத்து பாருங்க" என்றார். பார்த்தால் முந்தைய தின தேதி இருந்தது.//

இதெல்லாம் வட இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள், முன்னர் சைதையில் நான் இருந்த போது குல்பி, சர்பத், ஜூஸ் வண்டிக்காரர்கள் எல்லாம் எங்க வீட்டுப்பக்கம் தான் கும்பலாக இருந்தார்கள், இப்போவும் இருக்காங்களா தெரியலை. அங்கெ நடக்கிற பிரிபரேஷன் பார்த்தா மனுஷன் என்ன மாடு கூட குடிக்காது, ஃபுருட் மிக்சர் என்று ஒன்று உண்டு அதை எப்படி தயார் பண்றாங்கணு தெரிந்தால் ஓடிப்போய்டுவிங்க. சில ஹோட்டல்களில் நல்ல ஐடெம் கிடைக்கிறது ஆனால் 5 ரூ அல்ல 25-30 இருக்கும்.

வட இந்தியாவில் நெடுஞ்சாலை வழியில் மினரல் வாட்டர் எல்லாம் இல்லை இது போல தள்ளு வண்டிகளில் டேன்க் வைத்து கை பம்ப் மூலம் ஒரு கிளாஸ் ஜில் தண்ணி 1 அல்லது 2 ரூ என விற்கிறார்கள் அது எத்தனை நாள் தண்ணியோ, என்ன தண்ணியோ காரில் போவோரும் வாங்கி குடிக்கிறார்கள்.

நீங்க ஜல் ஜீர சோடா , தம்ஸ் அப், கோக் குடிச்சது இல்லையா? லெமன் சோடா விட சுப்பரா இருக்கும், சூப்பெர் மார்கெட்ல எவெரெஸ்ட் ஜல்ஜீரா மசாலா கிடைக்கிறது வீட்டிலே ஜஸ்ட் மிக்ஸ் அன்ட் ட்ரீங் தான், நல்ல ஜீரண சக்தியும் உண்டு.

//ரூம்ல நெறையா கொசு இருந்தா ஆக்டிவ் மோட் என்கிற விளம்பரத்தை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த மெஷினை வட்டமடித்தபடியே கொசு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாம் புகுந்து கடிக்குதுப்பா...!!//

ஓய் அந்த மருந்து கொசுவ கொல்ல ,விரட்டனு எவன் சொன்னான்? அதில் இருப்பது அல்லித்திரின் என்ற மருந்து + லெமன் கிராஸ் ஆயில். மருந்தது 1 ஒர் 2% தான் அதுக்கெல்லாம் கொசு என்ன அதன் குஞ்சு கூட ஓடாது, அந்த மருந்தது நம்மை மயக்கத்தில் ஆழ்த்த தான் , போட்டுவிட்டு படூத்தால் மயங்கிடுவிங்க அப்புறம் கொசு கடித்தாக் வலிக்காது.:-)).

கொசுவினைக்கொல்ல கிட்டத்தட்ட 35% இ.சி இருக்கணும் அப்படி வைத்தா கொசுவுக்கு முன்னர் நாம் போய்டுவோம்.

பிரபல கம்பெனி கொசு மருந்தை நானே குடிசை தொழிலாக தயாரிப்பேன் ஆனால் ஒருத்தனும் வாங்க மாட்டான்.

கொசுவை தடுக்க ஜன்னலுக்கு எல்லாம் நெட்லான் வலை(சதுர அடி 17-25 ரூ) அடித்து விட்டு மிச்சம் மீதி கொசுவை கொல்ல கைல ஒரு ஷாக்கடிக்கும் டென்னிஸ் பேட் வைத்துக்கொள்வதே சால சிறந்தது.(என் கைல ஒரு கொசு தப்பாதுல்ல... ரொஜெருக்கே சவால் விடும் வேகம்)

இல்லை எனில் ஆரஞ்சு, சாத்துக்குடி, உரித்த தோல் மட்டுமே.. வேப்பிலை இவற்றை நெருப்பில் போட்டு மூட்டம் போட்டு புகை உண்டாக்கினால் கொசு ஒடி விடும்.(ஆவுற காரியாமா இது)

யாருக்கோ கொசு ஜட்டி உள்ள போய் கடிச்சு இருக்கு போல :))

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

எனக்கு தெரிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாம் புகுந்து கடிக்குதுப்பா...!!
superb

Sivakumar said...

விஜய் ஆந்திரா பக்கம் கை காட்டுவதாக எழுதி இருந்த வரிகள் அருமை. இப்போது லெமன் சோடா ரேட் என்ன?

Sivakumar said...

கல்வெட்டுல எழுதுறதுக்கு பதிலா மெட்ரோ ட்ரெயின் போற பாலம் முழுக்க எழுதுனா நிறைய ஸ்பேஸ் கிடைக்கும். நெரிசல் இருக்காது.

போர்வைய இழுத்து போத்துனாக்கூட காதோரம் காலிங் பெல் அடிக்கிற ஆளு # கொசு.