Saturday, November 27, 2021

ஒமிக்ரான் வைரஸ் பெயர் காரணம் என்ன?

 



கடந்த 2 வருடங்களாக நிலவிய கொரோனவின் தாக்கம் தற்போது தணிந்து வரும் நிலையில், உருமாறிய கொரோனா புதிய வகை வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

முதலில் B.1.1.529 என குறிப்பிடப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலக சுகாதார மையத்தினால் ஒமிக்ரான் (OMICRON) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதன் காரணத்தை  பார்ப்போம்.

உலக சுகாதார மையம் (WHO) கொரோனவின் புதிய உருமாற்ற வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்கள் (Greek Alphabets) ஒவ்வொன்றாக பெயரிட்டு வருகிறது. அதன்படி தற்போதைய கொரோனா வைரஸிற்கு 'NU' என பெயரிட வேண்டிய நிலையில், அது ஆங்கில சொல்லான 'New' ஆக புரிந்து கொள்ளப்படும் என்பதால் அந்த சொல் தவிர்க்கப்பட்டது.

அதற்கு அடுத்து 'Xi' என பெயரிட வேண்டிய நிலையில் அச்சொல் சீன அதிபர் 'Xi Jinping' ஐ குறிப்பதால் அந்த சொல்லும் தவிர்க்கப்பட்டு அதற்கு பின்னர் வரும் கிரேக்க சொல்லான 'Omicron' ஒமிக்ரான் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


No comments: