Tuesday, January 25, 2011

ஃபீலிங்ஸ் 25 01 11


டந்த பதிவில் நித்தியை கிண்டலடித்ததாலோ என்னவோ ஒரு வைரஸ் அஸ்திரம் வந்து தாக்கி.. ஒரு வார காலம் வைரஸ் பீவரால் ஹாஸ்பிட்டலில் சமாதி நிலை அடைய வேண்டியதாகி விட்டது. சீ சீ.. நீங்க நினைக்கிற மாதிரி நித்தி சமாதி நிலை அல்ல. (ஆஹா மறுபடி கலாய்ச்சிட்டேனே.. சாமி மன்னிக்கனும்...)

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ராகவன் அவர்கள் எழுதிய காஷ்மீரை முழுவதும் படித்து முடித்து விட்டேன்.

இந்த உடல்நிலை கோளாறால் பல பணிகள் முடங்கிவிட்டன.  ஆயினும் வந்த உடன் முதல்வேலையாக செய்ய வேண்டியிருந்த பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன். யாருக்கேனும் கிடைக்கவில்லையென்றால்  எனக்கு அடுத்த ஜுரம் வருவதற்குள் பின்னூட்டமோ மெயிலோ தட்டி விடவும்.


ர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை.  அதன் பழைய லோகோ  கம்பீரமாகவும் இது ஏதோ காமெடி பீஸ் போலவும் எனக்கு தோன்றுகிறது. (அது சரி ராசா ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மாட்டுனதுக்கு அப்புறம் லோகோவை மாத்துனாங்களே.. அதுல ஏதாவது நுண்ணரசியல் இருக்கா பாஸு?)


புத்தக கண்காட்சி குறித்த இந்த வார ஆனந்த விகடன் கலாய்த்தல் செம ரகளை. பதிவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர், அதை போட்டோ எடுத்து பெரிய விழா போல் மறுநாள் பிளாக்கில் போட்டுக்கொள்கின்றனர் என்கிற ரேஞ்சுக்கு நம்மை கலாய்த்து நமக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஹி...ஹி.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...


பெங்களூருவிலிருந்து என்.சொக்கன் சார் வருகிறார் என்ற உடன் அன்றே புத்தக கண்காட்சி சென்று அவரை பார்த்தேன். இனிமையாக பழகுகிறார். நிறைய பேசினோம். போட்டோ கமெண்ட்ஸ் குறித்து அவர் பாராட்டி ஊக்கப்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாதது.  அவருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக அமைந்தது.

லொயோலா கல்லூரி விஸ்காம் துறையில் அனிமேஷன் கோர்ஸ் எடுக்கிறார்கள். அங்கு எனது இளநிலை கணித படிப்பை படித்த காலத்தில் விஸ்காம் துறையை பார்க்கும பொழுதெல்லாம் பொறாமையாக இருக்கும். லொயோலா விஸ்காமில் படிக்காமல் போய்விட்டோமே என்கிற குறை ரொம்ப நாளாகவே இருந்தது. முடிந்தால் தற்போது சேர வேண்டும் என்றிருக்கிறேன்.

விபரங்களுக்கு : 9566100228காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. "படம் பார்க்க வர்றவங்களை படம் பிடிச்சு நெட்ல விட்ராதீங்கப்பா..." என கமெண்ட் அடித்தபடியே அதைப் பார்த்து பார்த்து சிரித்தோம்.  மானேஜரைப் பார்த்து முறையிட்டாலே ஆச்சு என அடம்பிடித்தான் நண்பன். 

"அட நீ வேற.. இதுக்கெல்லாம் அவரை போய் கேட்டுக்கிட்டு.. இந்த மாதிரி வீணா போன விஷயத்துக்காகத்தான நான் பிளாக்கு வச்சிருக்கேன்,.. நாளைக்கு நியாயம் கேட்டுடலாம் விடு" என அவனை சமாதானப்படுத்தியபோது சந்தானம் போல முறைத்தான்.  (மானேஜர் சார்.. அப்படியே இன்டர்வெல்ல வாங்குன கார்ன் பப்ஸ்ல எண்ணெய் கசடு அடிச்சது.. பேலன்ஸ் கொடுத்த இருபது ரூபாய் நோட்டு கிழிஞ்சு இருந்ததுங்க... இதுக்கும் சேர்த்து ஏதாவது நியாயம் சொல்லுங்க)
9 comments:

Cable சங்கர் said...

ரைட்டு சொல்லிருவோம்.

Ganesan said...

ஆண்கள் டாய்லெட்ல கேமராவா? என்ன பண்ணுவாய்ங்க?

Chitra said...

நல்லா கலாய்க்கிறீங்க...

Vadielan R said...

உடல் நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன். உடம்ப பார்த்துக்கங்க தல எனக்கு இன்னும் வரல

Madurai pandi said...

ரைட்டு!!

சேலம் தேவா said...

//காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது.//

இனிமே யூரின் டேங்கே உடைஞ்சாலும் தியேட்டர்ல போகக்கூடாது. சின்னபிள்ளைத்தனமால்ல இருக்கு...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்ல பிலீங்...

Philosophy Prabhakaran said...

// ஏர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. //

ஒருவேளை வலைமனை லோகோ சாயலில் இருக்கிறது என்பதாலா...

// காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. //

தியேட்டர் ஆண்கள் கழிவறையில் பயர் மாதிரியான சமாச்சாரங்கள் நடக்காமல் தடுக்க இது மாதிரி செய்திருக்கலாம்...

சரி, உடம்பை பார்த்துக்கோங்க...

Prabu Krishna said...

//பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.//

வந்தாச்சு வச்சாச்சு.