Thursday, May 27, 2010

வலைமனை ஃபீலிங்ஸ் - 27 மே 2010


____________________________உட்கார்ந்து யோசிச்சது

தினமும் சோப்பு போட்டு குளிச்சிட்டு அப்புறம் அரை டப்பா நைசில் பவுடரை உடம்புல போட்டுகிட்டு வெளியே கிளம்பினாதான் சென்னை வெயிலை பேஸ் பண்ண முடியும்ங்கற கொதிச்சு போன  நிலைமையில தவிச்சு போய் கிடந்தப்பதான் அந்த பொண்ணு வந்துச்சு. பேரு லைலா..ரெண்டே நாளு. ஊரே ஊட்டி அளவுக்கு குளிர்ந்து போனாலும் கிளம்பும் போது கொஞ்சம் டேமேஜ் பண்ணிட்டு போயிருக்கு. 
  எக்சல் ஷீட்டுல  சார்ட் போட்டு புள்ளி விபரம் காட்டுற மாதிரி  எந்த கான்ட்ராக்டர் எவ்வளவு கமிஷன் அடிச்சிருக்காருங்கிற அளவுக்கேற்ப அங்கங்க தார் ரோடு நார் நாரா கிழிஞ்சி போய் கிடக்கு. அதெல்லாம் சரி இந்த புயலுக்கு போய் எவன்டா லைலானு பேர் வச்சான்னு விசாரிச்சா, சுழற்சி முறையில எட்டு நாடுகள் பரிந்துரை செய்றாங்களாம். இந்த லைலா புயலுக்கு பேர் வச்சது யாரு தெரியுமா ? நம்ம பாகிஸ்தான் பய புள்ளைங்க. 
   சானியா பொண்ணை நம்ம கிட்ட இருந்து உஷார் பண்ணிக்கிட்டு போனதிலேயே  நம்ம ஏரியா பசங்க  ஆஃப் பண்ணியும் சூடு ஆறாத அடுப்பு மாதிரி கடுப்புல இருக்கானுங்க, இதுல இந்த லைலாவை வேற திட்டம் போட்டு அனுப்பி வச்சிருக்காங்க நம்ம பங்காளி பாகிஸ்தான்காரங்க... இருங்கடி அடுத்த சூறாவளிக்கு சிங்கம்னு பேர் வச்சி அனுப்புறோம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா... எப்படி தாங்குறீங்கன்னு பாக்கறோம்.  (முதல்ல சுறானு பேர் வைக்க பரிந்துரை செய்யாலமுன்னு பார்த்தேன்.. ஆனா ட்ரைலர் பார்த்த உடனே தெரிஞ்சிடுச்சு சிங்கம் சுறாவை விட கொலைகார மிருகமா இருக்கும் போல.. )____________________________இசை எங்கிருந்து வருது தெரியுமா?

'செம்மொழியான தமிழ் மொழியாள்' பாட்டு கேட்டேன். பிடிப்பது மாதிரியும் பிடிக்காத மாதிரியும் ஏதோ ஒரு மாதிரி உள்ளது. என்ன மாதிரி என்றுதான் சொல்ல தெரியவில்லை. 
   ஏ.ஆர் பாடல்கள் சிலருக்கு கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என நிலவும் கருத்துக்கு நானும் பல்வேறு கட்டங்களில் உதாரணமாக இருந்ததுண்டு.  விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களை முதல் முறை கேட்டு கடுப்பாகி அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் படம் பார்த்த பின்பு தினமும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
   செம்மொழி பாடலை பொறுத்தவரை 'தாய் மண்ணே வணக்கம்' பாடலை கேட்கும் போது ஒரு சிலிர்ப்பு வருமே அந்த ஃபீல் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்..  ம்ம்ம் ம்ம் ம்ம்... எதற்கும் விஷுவல்ஸ் வரட்டும். கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்.________________________________விகடனில் கேபிள்ஜி

ல கேபிள் சங்கரின் வலைப்பூ குறித்த அறிமுகம் சென்ற வார விகடன் வரவேற்பரையில் வெளிவந்துள்ளது. செய்தி கேள்விப்பட்ட உடனேயே புத்தகத்தை வாங்கி பார்த்தேன். சிறப்பான அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். 

  புதிய வலைப்பதிவர்களை கைப்பிடித்து அழைத்து சென்று ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்ப கட்டத்தில் எப்படி பயணிப்பது, என்ன செய்வது என தெரியாமல் குழம்பி நின்ற எனக்கு நிறைய வழிகாட்டியிருக்கிறார். 
     ஒரு சமயம் அவரிடம் கேட்டேன்... 
   "சார், கமெண்ட் பண்றதுக்கு சில சமயம் பயமா இருக்கு. ஏதோ ஆட்டோ வருமாமே..?"
 நகைச்சுவையுடன் அவர் தைரியம் கொடுத்தது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. 
   "உன்னை அடிச்சாங்கன்னு வைய்யி.. அடிபட்ட போட்டோவோட என்னை அடித்துவிட்டார்கள்னு ஒரு பதிவு போடு,  ஒவர் நைட்ல நீ பயங்கரமா ஃபேமஸ் ஆயிடுவே.. பயப்படாம எழுதுய்யா பார்த்துக்கலாம்" என்றார்.
 விகடன் வரவேற்பறையில் அவர் அமர்ந்தது போல வெகு விரைவில் இயக்குனர் நாற்காலியில் உட்கார அனைவரும் வாழ்த்துவோம். ( நல்லா வாழ்த்துங்கப்பா... படம் எடுக்கும்போது ஷுட்டிங் ஸ்பாட்ல சினேகா அக்காவை கண்ணுல காட்டுறேன்னு சொல்லி இருக்காரு)


குறிப்பு : (வெகு சமீபத்தில் கண்ணில் பட்டது.. கேபிள்ஜி பற்றி ஒரு பதிவரின் சுவையான கண்ணோட்டம்)  
   


_________________________________திருமண வாழ்த்து

திவர் கலையரசன் என்கிற கலக்கல் கலை இன்று மணவிழா காண்கிறார். நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க இயலாவிட்டாலும் வான், கடல், நிலம் என எங்கும் வியாபித்திருக்கும் இந்த இணைய அணுக்கள் மூலம் வாழ்த்துக்களை எங்கும் நிரப்புகிறேன். 
      மணமக்கள் இருவரும் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துவோம்.!

_______________________________சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ்

ந்த மருத்துவமனையில் அப்போதுதான் பிறந்திருந்த அந்த குழந்தை மெல்ல கண்விழித்து, 
அருகில் நின்ற நர்சை பார்த்து கேட்டது,

" கரண்ட் இருக்கா..."

  நர்ஸ், "இல்லை" என்றாள்.

"அட... ச்ச்ச்சே.. மறுபடி தமிழ் நாட்டுலதான் பிறந்திருக்கேனா ??"Thursday, May 20, 2010

சென்னை சூப்பர் கிங் - விஸ்வநாதன் ஆனந்த்

உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்....!!Tuesday, May 18, 2010

வலைமனை கார்டூன்ஸ்

வழக்கம் போலவே உங்கள் ஆதரவை எதிர்பார்த்து ஒட்டு, பின்னூட்டம் விழ பதிவு மேல் விழி வைத்து காத்திருக்கும் நண்பன்....

Sunday, May 16, 2010

வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்


// அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல //

ஐ.பி.எல் 2010 வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்..LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...